/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : ஜூலை 28, 2024 12:54 AM

ஆன்மிக உரை
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், சிறப்பு ஆன்மிக உரை, ராம்நகர், ராமர் கோவிலில் நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, ஸ்ரீ ரமண சத்சங்கத்துடன் நிகழ்ச்சி துவங்குகிறது. மாலை, 6:30 மணிக்கு நடக்கும் நிகழ்வில், 'நீ நீயாக இரு' என்ற தலைப்பில், சொற்பொழிவாளர் ஸ்ரீ கிருஷ்ணா உரையாற்றுகிறார்.
தேய்பிறை அஷ்டமி
அன்னுார், மொண்டிபாளையம், பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமி வேள்வி யாகத்துடன் நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு வேள்வி பூஜை நடக்கிறது. பக்தர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொள்ளலாம்.
சூழலியல் கருத்தரங்கு
அவிநாசி ரோடு, கொடிசியாவில் கோவை புத்தக திருவிழாவின் ஒரு பகுதியாக, அறிவுக்கேணி மற்றும் ஓசை சுற்றுச்சூழல் அமைப்பு இணைந்து, சிறப்பு சூழலியல் கருத்தரங்கை நடத்துகின்றன. காலை, 10:30 மணிக்கு நடக்கும் நிகழ்வில், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் உலகத் தமிழ்ப் பீட விருது பெற்ற பாவலர் அறிவுமதிக்கு, பாராட்டு விழா நடக்கிறது.
நவீன நாடகம்
ஆணிவேர் படைப்பரங்கத்தின் படைப்பாக திருநங்கைகளின் உருமாற்றத்தின் வலி வேதனையை உணர்த்தும் வகையில், 'அண்ணகர்கள்' நவீன நாடகம் இன்று நடக்கிறது. வடகோவை, மாருதி தியேட்டர் அருகே உள்ள சமுதாய கூடத்தில், மாலை, 6:00 மணிக்கு நாடகம் துவங்குகிறது.
இலவச மருத்துவ முகாம்
பி.டி.ஜி., டிரஸ்ட் லைப்ரே பவுண்டேஷன் மற்றும் கே.எம்.சி.எச்., மருத்துவ கல்லுாரி மருத்துவமனை இணைந்து, இலவச மருத்துவ முகாமை நடத்துகின்றன. காளப்பட்டி, கோவை மாநகராட்சி துவக்கப்பள்ளியில், காலை, 9:00 முதல் மதியம், 1:00 மணி வரை முகாம் நடக்கிறது.
இலக்கியச் சந்திப்பு
கோவை மாவட்ட மைய நுாலகம் மற்றும் வாசக சாலை சார்பில், இலக்கியச் சந்திப்பு நடக்கிறது. எழுத்தாளர்கள் ஜெயகாந்தனின், 'ஒரு வீடு பூட்டிக் கிடக்கிறது, புதுமைப்பித்தனின் 'காஞ்சனை', பிரபஞ்சனின் 'அப்பாவின் வேஷ்டி' ஆகிய நுால்கள் குறித்து கலந்துரையாடல் நடக்கிறது. ஆர்.எஸ்.புரம், மாவட்ட மைய நுாலகத்தில், மாலை, 5:00 மணிக்கு நிகழ்ச்சி நடக்கிறது.
வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி
மாபெரும் வீட்டு உபயோகப் பொருட்களின் கண்காட்சி, சுந்தராபுரம், செங்கப்பகோனார் திருமண மண்டபத்தில், காலை, 11:00 முதல் இரவு, 9:00 மணி வரை நடக்கிறது. விளையாட்டுகள், ரோபோடிக் பறவைகள், உணவுத்திருவிழா போன்ற பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் உள்ளது.
கண் பரிசோதனை முகாம்
கோவை மாவட்ட பார்வை இழப்புத் தடுப்புச் சங்கம் மற்றும் அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து, இலவச கண் பரிசோதனை முகாமை நடத்துகின்றன. கோட்டைமேடு, நல்லாயன் துவக்கப்பள்ளியில், காலை, 8:30 முதல் மதியம், 1:30 மணி வரை நடக்கிறது.
திருக்குறள் பயிலரங்கு
திருக்குறள் உலகம் கல்விச்சாலை மற்றும் மாவட்ட மைய நுாலகம் இணைந்து, 'திருக்குறள் பார்வையில் நிர்வாகத்திறன்கள்' என்ற பயிலரங்கை நடத்துகின்றன. ஆர்.எஸ்.புரம், கவுலி பிரவுன் ரோடு, கோவை மாவட்ட மைய நுாலகத்தில், காலை 11:00 மணிக்கு, பயிலரங்கு நடக்கிறது.
உயர்தர மருத்துவ முகாம்
அன்னுார், பேரூரடிகளார் மருத்துவமனை சார்பில், சிறப்பு உயர்தர இலவச மருத்துவ முகாம் நடக்கிறது. அன்னுார், ஓதிமலை ரோடு, மன்னீஸ்வரர் கோவில் பின்புறம், கஸ்துாரி ஹாலில் முகாம் நடக்கிறது. காலை, 9:00 முதல் மதியம், 2:40 மணி வரை முகாமில் பொதுமக்கள் கலந்துகொள்ளலாம்.
இயற்கை வாழ்வியல்
கோவை இயற்கை நலச்சங்கம் சார்பில், இயற்கை வாழ்வியல் விழிப்புணர்வுக் கூட்டம் நடக்கிறது. அவிநாசி ரோடு, அண்ணாசிலை எதிரே, ஸ்ரீ சாய் கபே டி.கே.பி., சேம்பரில் காலை, 10:30 மணிக்கு கூட்டம் நடக்கிறது. இதில், 'இயன்றளவு இயற்கை வாழ்வியல்' என்ற தலைப்பில் சிறப்புரை நடக்கிறது.
முப்பெரும் விழா
கோவை மாவட்டப் பாவேந்தர் பராதிதாசன் இலக்கியப் பேரவை சார்பில், குன்றக்குடி அடிகளார் நுாற்றாண்டுத் தொடக்கம், புதுமைக் கவிஞரேறு வாணிதான் 110 வது மற்றும் காமராஜர் 122 வது பிறந்த நாள் விழா, முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது. போத்தனுார், தென்னக ரயில்வே இன்ஸ்டியூட்டில், காலை, 10:30 மணிக்கு விழா நடக்கிறது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.,நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது.
* குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.
சிறப்பு பட்டிமன்றம்
கோவை நகைச்சுவை சங்கம் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனம் சார்பில், மெகா சிறப்பு பட்டிமன்றம் நடக்கிறது. சொல்வேந்தர் சுகிசிவம் தலைமையில், 'அதிக மகிழ்ச்சி தருவது உறவே, நட்பே' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது. ஈச்சனாரி, செல்வம் மஹாலில், மாலை, 5:30 மணிக்கு நடக்கும் நிகழ்விற்கு அனுமதி இலவசம்.