/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : ஆக 31, 2024 01:34 AM

கலை இலக்கிய போட்டி
புலியகுளம், கார்மல் கார்டன் பள்ளியின், 60வது ஆண்டை முன்னிட்டு, மாவட்ட அளவிலான கலை இலக்கிய போட்டிகள் நடக்கிறது. மெட்ரிக் பள்ளிகளுக்கிடையே, ஓவியம், மாறுவேடம், கதை கூறுதல், கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் காலை, 10:00 முதல் மாலை, 3:00 மணி வரை நடக்கிறது.
பள்ளி ஆண்டு விழா
ஸ்ரீ கோபால் நாயுடு பள்ளியில், 50வது ஆண்டு விழா நடக்கிறது. நேற்று துவங்கிய விழா, நாளை வரை பள்ளி வளாகத்தில் நடக்கிறது. இன்று, காலை, 9:00 மணி முதல் மாணவர்களின் கலை நிகழ்வுகள், டிரம்ஸ், லைட் மியூசிக் மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடக்கிறது.
மண்ணின் உயிர்நாடி
மண்ணின் உயிர்நாடியாம் நீர்நிலைகளை காக்க, ஆர்வமுள்ளவர்கள் இணையலாம். கோவை மேற்கு மலைத்தொடர்களின் அருகே அமைந்துள்ள கணுவாய் தடுப்பணையை புனரமைக்கும் பணியை கவுசிகா நீர்க்கரங்கள் துவக்கவுள்ளது. கணுவாய் தடுப்பணையின் வடமேற்கு பகுதியில், காலை, 9:00 மணிக்கு துவக்க விழா நடக்கிறது.
போதைப்பொருளை ஒழிப்போம்
தமிழ்நாடு சுயநிதி கலை அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லுாரிகளின் சங்கம் சார்பில், போதைப்பொருள் பயன்பாடு இல்லாத கல்லுாரி வளாகங்களை உருவாக்கும் நோக்கில் ஓட்டப் பந்தயம் நடக்கிறது. ரேஸ்கோர்சில், காலை, 6:30 மணிக்கு துவங்கும் ஓட்டம், ராமகிருஷ்ணா கல்லுாரி வரை, ஐந்து கிலோ மீட்டருக்கு நடக்கிறது.
தாய்மார்கள் சந்திப்பு
சித்தாபுதுார், பேபியமா கிளினிக் சார்பில் கர்ப்பிணிகள் மற்றும் புதிய தாய்மார்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மாலை, 4:00 மணிக்கு நடக்கும் நிகழ்வில், கர்ப்பிணிகள் மற்றும் புதிய தாய்மார்களுக்கு தடுப்பூசிகளின் முக்கியத்துவம் மற்றும் இலவச மகப்பேறு ஆலோசனைகளை மருத்துவர்கள் வழங்குகின்றனர்.
ஓவியக்கண்காட்சி
கஸ்துாரி சீனிவாசன் அறநிலையத்தின் நடப்பாண்டுக்கான ரிதமிக் பேலட் தொடரின், 218வது ஓவியக்கண்காட்சி நடக்கிறது. இதில், தேசிய ஓவியப் போட்டியில் கலந்துகொண்ட அகில இந்திய ஓவியர்களின் படைப்புகள் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளது. காலை, 10:00 முதல் மாலை, 6:00 மணி வரை பார்வையிடலாம்.
ஸ்டைல் பஜார் கண்காட்சி
'ஸ்டைல் பஜார்' எனும் டிசைனர் மற்றும் லைப்ஸ்டைல் கண்காட்சி ரேஸ்கோர்ஸ், தாஜ் விவாந்தாவில் நடக்கிறது. விழாக்காலத்தை முன்னிட்டு, ஆடைகள், அணிகலன்கள், அலங்கார பொருட்கள் ஆகியவற்றில் புதிய ரகங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. காலை, 10:00 முதல் இரவு, 9:00 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம்.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.,நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.
இலக்கிய சொற்பொழிவு
பி.எஸ்.ஜி., அறநிலையம் சார்பில் ஆன்மீக இலக்கிய தொடர் சொற்பொழிவு நடக்கிறது. பீளமேடு, பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி வளாகத்தில், மாலை, 5:15 மணிக்கு சொற்பொழிவு நடக்கிறது. மரபின் மைந்தன் முத்தையா, 'ஏட்டு வழிச்சாலை' என்ற தலைப்பில் பேசுகிறார்.
கட்டுமானக் கண்காட்சி
கட்டுமானம், கட்டடக்கலை மற்றும் வீட்டு அலங்காரப் பொருட்களன் கண்காட்சி, அவிநாசி ரோடு, கொடிசியா அரங்கில் நடக்கிறது. ஹால் 'ஏ'வில் நடக்கும் கண்காட்சியை, காலை, 11:00 முதல் இரவு, 8:00 மணி வரை பார்வையிடலாம். அனுமதி இலவசம்.