/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : செப் 07, 2024 02:37 AM

கும்பாபிஷேக விழா
ஆர்.எஸ்.புரம் விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில், காலை, 6:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜையும், மாலை, 6:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜையும் நடக்கிறது. இதேபோல், வெள்ளலுார், மகாலிங்கபுரம், மாணிக்க விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாவில், மாலை, 3:30 மணி முதல், கோபுர கலச ஸ்தாபனம், முதற்கால யாக பூஜை மற்றும் அஷ்பந்தன மருந்து சாற்றுதல் நடக்கிறது.
மனச்சோர்வை வெல்லாம்
திருக்குறள் உலகம் கல்விச்சாலை சார்பில், திருக்குறள் பார்வையில், உடல் மற்றும் மனச்சோர்வை வெல்லும் வழிமுறைகள் குறித்து பயிலரங்கம் நடக்கிறது. பூமார்க்கெட், தேவாங்கப் பேட்டைத் தெரு, சுவாமி விவேகானந்தர் இல்லப் பள்ளி வளாகத்தில், மாலை, 6:30 மணிக்கு நடக்கிறது.
திருத்தேர்ப் பெருவிழா
சரவணம்பட்டி, சிவகாமியம்மன் சிரவணமாபுரீசுவர் கோவிலில் திருவீதி உலா நடக்கிறது. காலை, 4:30 மணி முதல், சிறப்பு வேள்வி, பொங்கல் வைத்தல் நடக்கிறது. காலை, 7:30 மணிக்கு மேல், உற்சவர் திருத்தேருக்கு எழுந்தருளலும், காலை, 9:00 மணிக்கு விநாயகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும் நடக்கிறது. மாலை, 4:30 மணிக்கு மேல், திருவீதி உலா நடக்கிறது.
கச்சிதமான கைத்தறி சேலைகள்
வேவ்ஸ் இந்தியா சார்பில், கைத்தறி சேலைகளின் சிறப்பு விற்பனை, அவிநாசி ரோடு, சுகுணா திருமண மண்டபத்தில் நடந்து வருகிறது. இந்தியாவின் புகழ்பெற்ற நெசவாளர்களிடமிருந்து நேரிடையாக கொள்முதல் செய்யப்பட்ட பட்டு சேலைகள் உள்ளன. சபல்புரி, டசர், ஆரணி, கோட்டா என புகழ்பெற்ற சில்க் சேலைகளை வாங்கலாம். காலை, 10:30 முதல் மாலை, 6:30 வரை விற்பனை நடக்கிறது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.