/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
/
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
ADDED : டிச 07, 2024 06:27 AM

சப்தாஹம்
ஸ்ரீ சத்ய சாய் சேவா நிறுவனங்கள் சார்பில், 'பகவான் சத்ய சாய்பாபாவின் வாழ்க்கை சரிதை' என்ற தலைப்பில், சப்தாஹம் நடக்கிறது. போத்தனுார், சத்யசாய் நகர், சத்யசாயி சேவா சமிதியில், மாலை, 5:30 மணி முதல், வேதாபாராயணம், பஜன், சொற்பெழிவு, மங்கள ஆரத்தி, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.
ரகுவீர கத்யம்
துடியலுார், கோதண்ட ராமசுவாமி சன்னதியில், ஸ்ரீ கடாக்சம் வித்யாலயா கோஷ்டியினரின்,' ரகுவீர கத்யம் மற்றும் பாதுகா சகஸ்ரம்' சேவாகாலம் நடக்கிறது. காலை, 10:00 முதல், மாலை, 3:00 மணி வரை, கோதண்ட ராமசுவாமிக்கு விசேஷ திருமஞ்சம், ரகுவீர கத்யம் சாற்றுமுறை மற்றும் சடாரி, தீர்த்தப் பிரசாத் கோஷ்டி நடக்கிறது.
ஆன்மிக சொற்பொழிவு
சங்கர் கண் அறக்கட்டளை சார்பில், 'பூஜ்ய ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி' என்ற தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது. டி.வி.எஸ்., மோட்டார் கம்பெனியின் சேர்மன் எமிரிட்டஸ் வேணு ஸ்ரீனிவாசன் உரையாற்றுகிறார். சத்தி ரோடு, சங்கரா கண் மருத்துவமனையின் டாக்டர் என்.மகாலிங்கம் அரங்கத்தில், மாலை, 5:00 மணிக்கு நடக்கிறது.
விழிப்புணர்வு மராத்தான்
யுனைடெட் கல்வி நிறுவனங்கள், கே.ஆர்., மருத்துவமனை சார்பில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்பு மராத்தான் நடக்கிறது. காலை, 6:00 மணிக்கு, 18 வயது, அதற்கு மேற்பட்டவர்களுக்கு பெரியநாயக்கன்பாளையம், கே.ஆர்., மருத்துவமனை முதல் யு.ஐ.டி., கல்லுாரி வரை நடக்கிறது. 14 முதல் 17 வயதிற்குட்பட்டவர்களுக்கு, சாமிசெட்டிபாளையம் முதல் யு.ஐ.டி., கல்லுாரி வரை நடக்கிறது.
ஓவியக் கண்காட்சி
கஸ்துாரி சீனிவாசன் அறநிலையம் சார்பில் நடக்கும் ஓவியக்கண்காட்சியில், கோவை ஓவியர் சுரேஷ், 'உள்ளூர் பறவைகளின் அழைப்பு' என்ற தலைப்பில், தனது ஓவியங்களை காட்சிப்படுத்தியுள்ளார், காலை, 10:00 முதல் மாலை, 6:30 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம்.
திருக்குறள் பயிலரங்கு
திருக்குறள் உலகம் கல்விச்சாலை சார்பில், திருக்குறள் பார்வையில், 'பொருள் உற்பத்தி திறனுக்கான நெறிமுறையும், வழிமுறையும்' என்ற தலைப்பில் பயிலரங்கு நடக்கிறது. பூமார்க்கெட், சுவாமி விவேகானந்தர் இல்லப் பள்ளி வளாகத்தில், மாலை, 6:30 மணி முதல் பயிற்சி நடக்கிறது. அனைவரும் பங்கேற்கலாம். அனுமதி இலவசம்.
வள்ளி கும்மி அரங்கேற்றம்
வெள்ளிக்குப்பம்பாளையம் வேணுகான வள்ளிக்கும்மி கலைக்குழுவின், வள்ளி கும்மி அரங்கேற்றம் நடக்கிறது. சிறுமுகை, பெள்ளேபாளையம், மொக்கையூர், ஓம் சக்தி நகரில், மாலை, 6:00 மணிக்கு வள்ளி கும்மி அரங்கேற்றம் நடக்கிறது.
ஒயிலாட்டம்
பேரூர், தீத்திபாளையம், சங்கமம் கலைக்குழுவின், ஒயிலாட்ட அரங்கேற்ற விழா நடக்கிறது. எம்.ஜி.,நகர், தீத்திபாளையம் ஊராட்சி ஒன்றி துவக்கப்பள்ளி அருகில், மாலை, 5:00 மணிக்கு அரங்கேற்ற விழா நடக்கிறது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.,நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.