/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தக்காளிக்கு விலையில்லை கால்நடைக்கு தீவனமானது
/
தக்காளிக்கு விலையில்லை கால்நடைக்கு தீவனமானது
ADDED : ஏப் 22, 2024 01:09 AM

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் தக்காளி வரத்து குறைந்தது, விலையும் சரிந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கிணத்துக்கடவு பகுதியில் அதிகளவு தக்காளி பயிரிடப்படுகிறது. விவசாயிகள் தக்காளியை விற்பனை செய்ய கிணத்துக்கடவு மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து ஏல முறையில் விற்பனை செய்கின்றனர்.
கிணத்துக்கடவில், தற்போது தக்காளி வரத்தும் குறைவாக உள்ளது. மார்க்கெட்டில் தக்காளி (15 கிலோ பெட்டி) 180 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இதனால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். விற்பனை ஆகாத தக்காளியை விவசாயிகள், மாட்டுக்கு தீவனமாக விட்டு சென்றுள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் கிணத்துக்கடவு சுற்று வட்டாரத்தில் தக்காளி விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் வியாபாரிகள் வருகை குறைந்துள்ளது. வியாபாரிகள் வரும் போது குறைந்த அளவு தக்காளி எடுத்து செல்வதால் அவர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
இந்நிலையில், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து தக்காளி கொண்டு வரப்படுவதால், விலை சரிந்துள்ளது,' என்றனர்.

