/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சூட்டை தணிக்க ஊட்டிக்கு 'டூர்' நாளை முதல் 'போலாம் ரைட்'
/
சூட்டை தணிக்க ஊட்டிக்கு 'டூர்' நாளை முதல் 'போலாம் ரைட்'
சூட்டை தணிக்க ஊட்டிக்கு 'டூர்' நாளை முதல் 'போலாம் ரைட்'
சூட்டை தணிக்க ஊட்டிக்கு 'டூர்' நாளை முதல் 'போலாம் ரைட்'
ADDED : மே 03, 2024 12:28 AM
கோவை;ஊட்டிக்கு செல்லும் சுற்றுலாப் பயணியர் வசதிக்காக, கோவையில் இருந்து இயக்கப்படும் அரசு பஸ்களின் புறப்பாடு எண்ணிக்கையை அதிகரிக்க, போக்குவரத்து கழக அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்துக்கு செல்லும் சுற்றுலாப் பயணியர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது, கோவையிலிருந்து ஊட்டி மற்றும் கூடலுார் வரை செல்லும் அரசு பஸ்களின் புறப்பாடு 80 ஆக உள்ள நிலையில், சுற்றுலாப் பயணியர் எண்ணிக்கைக்கு ஏற்ப, நாளை முதல், அரசு பஸ்களின் புறப்பாடு எண்ணிக்கை, கூடுதலாக 20 அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வரும் 10ல் இருந்து 20ம் தேதி வரை, ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடக்கிறது. நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா செல்வோருக்கு, மே 7 முதல் ஜூன் 30 வரை இ-பாஸ் நடைமுறைப்படுத்தப்படும் என, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், சுற்றுலாப் பயணியர் சிலர், ஊட்டியில் நெரிசலில் சிக்காமல் இருக்க, தங்கள் சொந்த வாகனங்களை தவிர்த்து, அரசு பஸ்களில் பயணிக்க வாய்ப்புள்ளது.
எனவே, மலர் கண்காட்சியின் போதும், சுற்றுலாப் பயணியர் மற்றும் பொதுமக்கள் கூட்டத்துக்கு ஏற்றவாறும், பஸ்களின் புறப்பாடு எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க, போக்குவரத்து கழக அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.