/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஞாயிறு அன்று டவுன் பஸ்கள் கோவை, உடுமலைக்கு இயக்கம்
/
ஞாயிறு அன்று டவுன் பஸ்கள் கோவை, உடுமலைக்கு இயக்கம்
ஞாயிறு அன்று டவுன் பஸ்கள் கோவை, உடுமலைக்கு இயக்கம்
ஞாயிறு அன்று டவுன் பஸ்கள் கோவை, உடுமலைக்கு இயக்கம்
ADDED : ஆக 04, 2024 10:02 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில், ஞாயிற்றுக்கிழமைகளில் சில அரசு டவுன் பஸ்கள், தொலைதுார ஊர்களுக்கு இயக்கப்படுவதாக ஓட்டுநர்கள் மற்றும் கண்டக்டர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பொள்ளாச்சி நகரில் இருந்து, சுற்றுப்பகுதி கிராமங்களுக்கு, 70க்கும் மேற்பட்ட டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. கிராமங்களில் வசிக்கும் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர், பணிக்கு செல்வோர் என, பலரும் பயனடைந்து வருகின்றனர்.
இதற்காக, ஒவ்வொரு பஸ்சும், குறிப்பிட்ட வழித்தடத்தில் குறித்த நேரத்தில் கிராமங்களைச் சென்றடையும் வகையில் காலஅட்டவணையும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால், பயணியர் வருகை குறைவு, பழுது போன்ற காரணங்களால், கிராமங்களுக்கு இயக்கப்படும் சில டவுன் பஸ்கள், முன் அறிவிப்பின்றி சில 'டிரிப்'கள் ரத்துச் செய்யப்படுவதும் உண்டு.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில், சில டவுன் பஸ்கள், தொலைதுார ஊர்களுக்கு இயக்கப்படுகிறது.
அரசு பஸ் ஊழியர்கள் கூறியதாவது:
ஏற்கனவே, போதிய பராமரிப்பின்றி டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில், கிராமங்களுக்கு இயக்கப்படும் பஸ்களில் பயணியர் எண்ணிக்கை குறைவு என்பதால், சில டவுன் பஸ்கள், உடுமலை, கோவைக்கு இயக்கப்படுகிறது.
இருப்பினும், போதிய பராமரிப்பின்றி காணப்படும் பஸ்களை காணும் மக்கள் அதில் பயணிக்க ஆர்வம் காட்டுவதில்லை. இத்தகைய திட்டத்தை அதிகாரிகள் கைவிட வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.