/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வியாபாரிகள் சங்க பேரவை மாநில மாநாட்டு பணிகள்
/
வியாபாரிகள் சங்க பேரவை மாநில மாநாட்டு பணிகள்
ADDED : ஏப் 16, 2024 12:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலூர்:தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின், மாநில மாநாட்டு பணிகள் துவங்கி வைக்கப்பட்டன.
தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின், 41வது மாநில மாநாடு, சூலூர் அடுத்த ராவத்தூர் பிரிவில் நடக்க உள்ளது.
மாநாட்டு தொடக்கமாக, நேற்று கால்கோள் விழா, மாநில தலைவர் முத்துக்குமார் தலைமையில் நடந்தது.
மாநில பொதுச்செயலாளர் ராஜா, பொருளாளர் பொன்னுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
40 அடி கொடிக்கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டது. மண்டல ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர், கிழக்கு மாவட்ட தலைவர் அய்யனார் ராஜ் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

