/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாரம்பரியமான ஆடிப்பெருக்கு; ஆற்றங்கரையில் கொண்டாட்டம்
/
பாரம்பரியமான ஆடிப்பெருக்கு; ஆற்றங்கரையில் கொண்டாட்டம்
பாரம்பரியமான ஆடிப்பெருக்கு; ஆற்றங்கரையில் கொண்டாட்டம்
பாரம்பரியமான ஆடிப்பெருக்கு; ஆற்றங்கரையில் கொண்டாட்டம்
ADDED : ஆக 04, 2024 05:33 AM

பொள்ளாச்சி : ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும். இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறப்படுகிறது. தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்ப்பிடி இடங்களில் பெய்த மழையால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும்.
நாகரிக மாற்றம் ஏற்பட்டாலும், பழமை மாறாமல், பொள்ளாச்சி பகுதியில் இந்த பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது.
பொள்ளாச்சி அருகே, ஆழியாறு ஆற்றில் மக்கள் பாரம்பரியத்தை கைவிடாமல் கடைபிடித்து வழிபாடு செய்தனர். குடும்பத்துடன் வந்து ஆற்றங்கரையில் இடம் பிடித்து வழிபட்டனர். வெற்றிலை பாக்கு, தேங்காய், பழம், பூ, ரவிக்கைத்துணி, காதோலை கருகமணி, திருமங்கல்யச் சரடு வைத்து வழிபாடு செய்தனர். வீட்டில் இருந்து கொண்டு வந்த கலவை சாதத்தை பகிர்ந்து உண்டு மகிழ்ந்தனர். முன்னோர்களுக்கு படையல் வைத்தும் பலர் வழிபாடு செய்தனர்.
சமத்துார் மாரியம்மன் கோவிலில், மொட்டை அடித்து முளைப்பாரி, பூவோடு எடுத்து மக்கள் பண்டிகையை கொண்டாடினர். ஆடிப்பெருக்கன்று ஆனைமலையில், மூங்கிலை கொண்டு தயாரிக்கப்படும் பாப்பட்டான் குழலில், காய்களை போட்டு இடித்து, பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவரும் விளையாடி மகிழ்ந்தனர்.