/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
/
மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஜூலை 27, 2024 12:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்;சின்னதடாகம் அருகே காளையனூரில் மரம் விழுந்து போக்குவரத்து பாதித்தது.
கோவையில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால், காற்றுடன் மழை பெய்து வருகிறது.
கோவை தடாகம் ரோடு, சோமையனூர் அடுத்துள்ள காளையனூரில் நேற்று மாலை வீசிய பலத்த காற்றில் அங்கு இருந்த மே பிளவர் மரம் ஒன்று ரோட்டில் வேருடன் சாய்ந்தது.
இதனால் கோவை, சின்னதடாகம், ஆனைகட்டி வழி போக்குவரத்து பாதித்தது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வனத்துறையினர் மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் ஒருங்கிணைந்து ரோட்டில் விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அகற்றினர்.
இதனால், அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.