மக்கள் தொகை கணக்கெடுப்பு 520 அலுவலர்களுக்கு பயிற்சி
மக்கள் தொகை கணக்கெடுப்பு 520 அலுவலர்களுக்கு பயிற்சி
ADDED : மே 27, 2026 03:10 PM
கோவை: கலெக்டர் அலுவலகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பாளர்களுக்கான பயிற்சி வகுப்பு நடந்தது. முதன்மை மக்கள் தொகை அலுவலராக மாவட்ட கலெக்டர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநகராட்சி பகுதிகளுக்கு மாநகராட்சி கமிஷனர், ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதிகளுக்கான பொறுப்பு அலுவலர்களாக 10 தாசில்தார்கள், 7 நகராட்சி கமிஷனர்கள், 33 பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பயிற்சியில் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மற்றும் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் என 520 பேர் கலந்து கொண்டனர்.
வரும் ஆகஸ்ட் 1 முதல் 30ம் தேதி வரை வீடு வாரியாக பட்டியலிடுதல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இருப்பிடத்தை துல்லியமாகக் காட்டும் ‘ஜியோ டேக்கிங்’ தொழில்நுட்பம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
ஒரு கணக்கெடுப்பாளருக்கு 800 வீடுகள் வரை ஒதுக்கப்படவுள்ளதால், தங்களுக்குரிய எல்லை பகுதிகளை துல்லியமாக வரையறுத்து பணியாற்ற அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
