/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓட்டுச் சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி
/
ஓட்டுச் சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி
ADDED : மார் 24, 2024 11:53 PM

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் சட்டசபை தொகுதியில், 321 ஓட்டு சாவடிகள் உள்ளன. இதில் ஓட்டு சாவடி அலுவலர்களுக்கு, முதல் கட்ட பயிற்சி வகுப்பு, சிறுமுகை சாலையில் தனியார் பள்ளியில் நடந்தது.
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் குணசேகரன் தலைமை வகித்து, பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார். தனித்துணை கலெக்டர் கல்பனா ஆய்வு செய்தார். பயிற்சியாளர்கள் முத்துரத்தினம், ராஜேந்திரன், ஆகியோர் பயிற்சிகளை அளித்தனர்.
இதில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு கையாள வேண்டும். முக்கிய படிவங்கள் எவ்வாறு பூர்த்தி செய்ய வேண்டும். ஓட்டுப்பதிவு முடிந்தவுடன், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை எவ்வாறு மூடி சீல் வைக்க வேண்டும், என்பது குறித்து, அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில், 1,593 பேர் பங்கேற்றனர். .

