/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊராட்சிகளில் குளோரினேஷன் ஆப்பரேட்டர்களுக்கு பயிற்சி
/
ஊராட்சிகளில் குளோரினேஷன் ஆப்பரேட்டர்களுக்கு பயிற்சி
ஊராட்சிகளில் குளோரினேஷன் ஆப்பரேட்டர்களுக்கு பயிற்சி
ஊராட்சிகளில் குளோரினேஷன் ஆப்பரேட்டர்களுக்கு பயிற்சி
ADDED : ஜூலை 08, 2024 12:42 AM
சூலுார்;ஊராட்சிகளில் தண்ணீர் தொட்டிகளை சுத்தம் செய்து, குளோரினேஷன் செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.
அரசூர் ஊராட்சியில், டேங்க் ஆப்பரேட்டர்களுக்கு, குளோரினேஷன் செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
சுகாதார ஆய்வாளர் மகேந்திரன் பேசுகையில், ''தொட்டிக்கு வரும் தண்ணீரில் உள்ள குளோரின் அளவை தினமும் சரிபார்க்க வேண்டும். 2 பி.பி.எம்., அளவுக்கு குறைவாக இருந்தால், குளோரினேஷன் மீண்டும் செய்ய வேண்டும். 1000 லி., தண்ணீரில் நான்கு கிராம் குளோரின் கலக்க வேண்டும். போர்வெல் தண்ணீருக்கு கட்டாயம் குளோரினேஷன் செய்ய வேண்டும்,'' என்றார்.
ஊராட்சி தலைவர் மனோன்மணி, ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி செயலர் மூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.