/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இல்லம்தேடி கல்வி திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி
/
இல்லம்தேடி கல்வி திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி
இல்லம்தேடி கல்வி திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி
இல்லம்தேடி கல்வி திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி
ADDED : செப் 15, 2024 11:44 PM
வால்பாறை : இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ், பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் போது, மாணவர்களுக்கு அடிப்படை பள்ளிக்கல்வி தடைபடாமல் இருக்க 'இல்லம் தேடி கல்வி திட்டம்' செயல்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ், தன்னார்வலர்களை நியமித்து, வீடு தேடி சென்று மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்பட்டது. அதன் பின் பள்ளி முழுமையாக செயல்பட்ட பின், இந்த திட்டம் தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளது.
ஒருங்கிணைந்த கல்வி வளர்ச்சி திட்ட அதிகாரிகள் கூறுகையில், 'வால்பாறை ஒன்றியத்தில், 45 இடங்களில் 'இல்லம்தேடி கல்வி திட்டம்' செயல்படுத்தப்படுகிறது. பள்ளிகளில் மெல்ல கற்கும் மாணவர்களுக்கு, பள்ளி நேரம் முடிந்த பின், மாலை நேரத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் வாயிலாக சிறப்பு வகுப்புக்கள் நடத்தப்படுகிறது. ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தன்னார்வலர்கள் வாயிலாக கல்வி கற்றுத்தரப்படுகிறது,' என்றனர்.