/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தலைமை ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு
/
தலைமை ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வு
ADDED : ஜூலை 03, 2024 09:56 PM
கோவை : கோவை கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட, அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான, பொது இடமாறுதல் கலந்தாய்வு நேற்று நடந்தது.
கோவை கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட, ஏழு ஒன்றியங்களில் உள்ள அரசு துவக்கப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களுக்கு, இந்த கல்வியாண்டுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு, டவுன்ஹாலில் உள்ள புனித மைக்கேல் பள்ளியில் நேற்று நடந்தது.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் புனிதா அந்தோணியம்மாள் கூறுகையில், கோவை கல்வி மாவட்டத்தில் உள்ள ஏழு ஒன்றியங்களில், துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 33 தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு, 10 தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பித்து, கலந்தாய்வில் கலந்துகொண்டனர். இதில், துவக்கப்பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள் 5 பேர், நடுநிலைப்பள்ளிகளுக்கு 5 தலைமை ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெற்றனர், என்றார்.