/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போக்குவரத்து ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்
/
போக்குவரத்து ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்
ADDED : ஜூன் 25, 2024 01:48 AM

பொள்ளாச்சி;கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சம்மேளனம் சார்பில், உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் - சி.ஐ.டி.யு.., சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி, 24 மணி நேர உண்ணாவிரத போராட்டம், பொள்ளாச்சி போக்குவரத்து கிளை முன்பாக நடந்தது. துணை பொதுச் செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். மண்டல பொதுச் செயலாளர் பரமசிவம், உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். மத்திய சங்க நிர்வாகிகள், கிளை கமிட்டி உறுப்பினர்கள் பங்கேற்றனர். அதில், 15வது ஊதிய ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிடவும்; ஓய்வு பெற்றவுடன் பணப்பலன், ஒப்பந்த பலன்களை வழங்கி ஓய்வூதிய உயர்வு வழங்க வேண்டும்.
பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு இணையாக டி.ஏ., உயர்வு, மற்ற துறைகளை போல் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். வாரிசு வேலையை உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட, ஆறு அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.