/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூண்டில் சிக்கியது சிறுத்தை தாளவாடி விவசாயிகள் நிம்மதி
/
கூண்டில் சிக்கியது சிறுத்தை தாளவாடி விவசாயிகள் நிம்மதி
கூண்டில் சிக்கியது சிறுத்தை தாளவாடி விவசாயிகள் நிம்மதி
கூண்டில் சிக்கியது சிறுத்தை தாளவாடி விவசாயிகள் நிம்மதி
ADDED : ஏப் 27, 2024 02:30 AM

சத்தியமங்கலம், ஏப். 27-
தாளவாடி மலையில் கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தை சிக்கியதால், விவசாயிகள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலையில் மல்குத்திபுரம் கிராமத்தில், பாக்யா என்பவரின் தோட்டத்தில் சில நாட்களாக ஆடு, மாடுகளை சிறுத்தை வேட்டையாடி வந்தது. இதனால் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன் படி, நேற்று முன்தினம் இரவு தோட்டத்தில் கூண்டு வைத்து, அதில் ஒரு நாயை கட்டி வைத்தனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலையில் வந்த சிறுத்தை, கூண்டில் சிக்கியது. இதனால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி, பர்கூர் அருகே தட்டக்கரை வனப்பகுதிக்குள் வனத்துறையினர் விடுவித்தனர்.