/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டில் விழும் நிலையில் மரம்; வாகன ஓட்டுநர்கள் அச்சம்
/
ரோட்டில் விழும் நிலையில் மரம்; வாகன ஓட்டுநர்கள் அச்சம்
ரோட்டில் விழும் நிலையில் மரம்; வாகன ஓட்டுநர்கள் அச்சம்
ரோட்டில் விழும் நிலையில் மரம்; வாகன ஓட்டுநர்கள் அச்சம்
ADDED : ஜூன் 02, 2024 11:43 PM

மரத்தை அகற்றணும்
பொள்ளாச்சி, கஞ்சம்பட்டிலிருந்து திம்பம்பட்டி செல்லும் ரோட்டின் ஓரத்தில் உள்ள தோட்டத்தில் தென்னை மரம் காய்ந்து, ரோட்டில் விழும் நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள் அச்சத்துடன் பயணிக்கும் நிலை உள்ளது. எனவே, இந்த மரத்தை உடனடியாக அகற்ற வேண்டும்.
- - செந்தில்குமார், பொன்னேகவுண்டனூர்.
மின்விளக்கு பிரச்னை
பொள்ளாச்சி, ஆனைமலையில் ஆங்காங்கே மின் விளக்குகள் சரி வர ஒளிராமல் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் தடுமாறி வருகின்றனர். மற்றும் இரவு நேரத்தில் பைக் ஓட்டுநர்களுக்கு விபத்து அபாயம் இருப்பதால், மின் துறை சார்பில் மின் விளக்குகளை சரி செய்ய வேண்டும்.
- - தென்னரசு, ஆனைமலை.
ரோட்டோரத்தில் துர்நாற்றம்
பொள்ளாச்சி - பல்லடம் ரோட்டில், புளியம்பட்டி தனியார் கல்லுாரி எதிரே ஏராளமான குப்பை கொட்டப்பட்டுள்ளது. இங்குள்ள குப்பை காற்றுக்கு பறந்து ரோட்டில் பயணிக்கும் வாகன ஓட்டுநர்கள் மீது விழுவதால், வாகன ஓட்டுநர்கள் சிரமப்படுகின்றனர். எனவே, இங்கு இருக்கும் குப்பையை ஊராட்சி நிர்வாகம் அகற்ற வேண்டும்.
-டேவிட், பொள்ளாச்சி.
டிவைடர் வையுங்க
பொள்ளாச்சி - கோவை ரோட்டில், யூ டர்ன் பகுதியில் டிவைடர்கள் வைக்கப்படாததால் அடிக்கடி விபத்து நடந்து வருகிறது. எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி யூ டர்ன் பகுதியில் டிவைடர்கள் வைக்க வேண்டும்.
- - சசி, கிணத்துக்கடவு.
குப்பையை எடுங்க
பொள்ளாச்சி, பாலகோபாலபுரம் வீதியில் உள்ள பள்ளி சுவற்றின் முன் ரோட்டோரத்தில் அதிக அளவு குப்பை கொட்டப்பட்டுள்ளது. இதனால் அவ்வழியில் செல்லும் அனைவரும் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் இதை கவனித்து உடனடியாக குப்பையை அகற்ற வேண்டும்.
- - விஜய், பொள்ளாச்சி.
பணிகளை விரைவுபடுத்தணும்
உடுமலை ராஜலட்சுமிநகரில் நகராட்சி சார்பில் பூங்கா அமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் பூங்காவை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே, பூங்கா பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சுமதி, உடுமலை.
தெருவிளக்குகள் எரிவதில்லை
உடுமலை, பூமாலை சந்து பகுதியில் இரவு நேரங்களில் தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது. மாலையில் குழந்தைகளை அவ்வழியாக அனுப்புவதற்கு பெற்றோர் அச்சப்படுகின்றனர். இருள் சூழ்ந்திருப்பதால், பலரும் குடியிருப்புகளின் அருகில் அமர்ந்துக்கொள்கின்றனர். எனவே, தெருவிளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- காயத்ரி, உடுமலை.
சுகாதாரம் கேள்விக்குறி
உடுமலை, கணக்கம்பாளையம் ரயில்வே கேட் அருகிலுள்ள பகுதிகளில் குப்பைக்கழிவுகள் சுத்தம் செய்யப்படுவதில்லை. திறந்த வெளியில் குப்பைக்கழிவுகள் குவிக்கப்படுகின்றன. இதனால் அப்பகுதியின் சுகாதாரம் முழுவதும் கேள்விக்குறியாகியுள்ளது.
- வாசுதேவன், உடுமலை.
கூடுதல் தெருவிளக்கு தேவை
உடுமலை, ஏரிப்பாளையத்திலிருந்து தாராபுரம் ரோட்டை இணைக்கும் பகுதியில் மாலை நேரங்களில் இருள் சூழ்ந்துள்ளது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் இரவில் நடந்துசெல்வதற்கு அச்சப்படுகின்றனர். கூடுதல் தெருவிளக்குகள் அமைக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- தேவராஜ், உடுமலை.
குறுகலான ரோடு
உடுமலை, மடத்துார் செல்லும் ரோடு குறுகலாக உள்ளது. இதனால் கனரக வாகனங்கள் செல்லும்போது மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் இடையூறு ஏற்படுகிறது. ரோட்டை விரிவுபடுத்த நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- செல்வகுமார், உடுமலை.
கழிவுகளை அகற்றணும்
உடுமலை - பழநி ரோடு ராஜலட்சுமி நகர் சந்திப்பு அருகே, கட்டட கழிவுகள், குப்பை கொட்டப்படுகிறது. இதனால், அப்பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, அக்கழிவுகளை அகற்ற நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- குமார், உடுமலை.