/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கன மழைக்கு சாய்கின்றன மரங்கள்: அகற்ற தேவை அதிக இயந்திரங்கள்
/
கன மழைக்கு சாய்கின்றன மரங்கள்: அகற்ற தேவை அதிக இயந்திரங்கள்
கன மழைக்கு சாய்கின்றன மரங்கள்: அகற்ற தேவை அதிக இயந்திரங்கள்
கன மழைக்கு சாய்கின்றன மரங்கள்: அகற்ற தேவை அதிக இயந்திரங்கள்
ADDED : மே 24, 2024 11:12 PM
கோவை : மழைக்கு மரங்கள் சாய்வது அதிகரித்துள்ள நிலையில் துாள் துாளாக்கும் இயந்திரம், அறுவை இயந்திரங்களை அதிகரிக்க, கோரிக்கை எழுந்துள்ளது.
கோவை மாநகரில் காற்று காலத்திலும், மழை சமயத்திலும் மரங்கள் கீழே விழுவது தொடர்கதையாக உள்ளது. கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது.
இம்மழைக்கு தாக்குப்பிடிக்காமல், கடந்த மூன்று நாட்களில் ரேஸ்கோர்ஸ், ராம்நகர், சாய்பாபா காலனி, கே.கே.புதுார் உள்ளிட்ட இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளன.
இதுவரை, 30க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்துள்ள நிலையில் மாநகராட்சி பணியாளர்கள், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் மரங்களை வெட்டி அகற்றியுள்ளனர். சாலையோரங்களில் உள்ள மரக்கிளைகள், மின் ஒயர்களில் உரசுவதால் மின் தடையும் ஏற்படுகிறது.
மோசமான நிலையில் இருக்கும் மரக்கிளைகளும், வெட்டி அகற்றப்படுகின்றன. இவற்றை மாநகராட்சி பணியாளர்கள் மரங்களை துாளாக்கும் இயந்திரங்கள் வாயிலாக அகற்றி வருகின்றனர். அதேசமயம், இயந்திரங்களை அதிகரிக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.
மாநகராட்சி பணியாளர்கள் கூறுகையில், 'மண்டலத்துக்கு இரண்டு வீதம், 10 துாளாக்கும் இயந்திரங்கள் மட்டுமே மாநகராட்சியில் உள்ளது. மழை, காற்று காலங்களில் மரங்கள் அதிகம் விழுவதால், பணிகளை முழுமையாக மேற்கொள்ள முடிவதில்லை. எனவே, மண்டலத்துக்கு ஐந்தாக இந்த இயந்திரங்களை அதிகரித்தால், பணிகளில் சுணக்கம் இருக்காது' என்றனர்.
இந்நிலையில், ரூ.30 லட்சத்தில் மர அறுவை உள்ளிட்ட இயந்திரங்கள் வாங்கவுள்ளதாக, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

