/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவை வழித்தடத்தில் அத்துமீறல்! நிறுத்தங்களில் நிற்காத பஸ்கள்
/
கோவை வழித்தடத்தில் அத்துமீறல்! நிறுத்தங்களில் நிற்காத பஸ்கள்
கோவை வழித்தடத்தில் அத்துமீறல்! நிறுத்தங்களில் நிற்காத பஸ்கள்
கோவை வழித்தடத்தில் அத்துமீறல்! நிறுத்தங்களில் நிற்காத பஸ்கள்
ADDED : மே 23, 2024 11:13 PM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி- - கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் பெரும்பாலான தனியார் பஸ்கள், நிறுத்தங்களில் நிற்காமல் செல்வதாக புகார் எழுந்துள்ளது.
பொள்ளாச்சி - கோவை வழித்தடத்தில், அரசு மற்றும் தனியார் பஸ்கள் என, 540 முறைகள் இயக்கப்படுகின்றன. அவ்வகையில், சாதாரண அரசு பஸ் மட்டுமின்றி தனியார் பஸ்களுக்கு, ஆச்சிப்பட்டி, கோவில்பாளையம், தாமரைக்குளம், கல்லாங்காட்டுபுதுார், கிணத்துக்கடவு, மரத்தோப்பு, ஒத்தக்கால்மண்டபம், ஈச்சனாரி, சுந்தராபுரம், குறிச்சி ஆகிய நிறுத்தங்களில் பயணியரை ஏற்றி இறக்கி உக்கடம் சென்றடைய வேண்டும்.
இதேபோல, 'எக்ஸ்பிரஸ்' பஸ்கள், கோவில்பாளையம், கிணத்துக்கடவு, ஒத்தக்கால்மண்டபம், ஈச்சனாரி, குறிச்சி ஆகிய நிறுத்தங்களில் நின்று செல்ல வேண்டும். இவற்றில் பெரும்பாலான தனியார் பஸ்கள், முக்கிய ஸ்டாப்களில் நிறுத்தப்படுவது கிடையாது.
தவிர, கிணத்துக்கடவு, ஒத்தக்கால்மண்டபம் ஸ்டாப்புகளை தவிர்த்து, மேம்பாலத்தின் வழியே பஸ்கள் இயக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், கிராமப்புறங்களில் இருந்து பணி நிமித்தமாக செல்லும் மக்கள், கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் சிறார்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர்.
மேலும், பொள்ளாச்சியில் இருந்து புறப்படும் பஸ்சில், இடையே உள்ள ஊர்களுக்குச் செல்லும் பயணியர் ஏற்றப்படுவதில்லை. கோவை செல்லும் பயணியர் மட்டுமே ஏற்றப்படுகின்றனர்.
அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் கூறியதாவது:
பஸ் ஸ்டாண்டில் இருந்து, உரிய நேரத்தில் தனியார் பஸ்கள் புறப்பட்டாலும், கோவைக்குச் செல்லும் பயணியர் மட்டுமே ஏற்றப்படுகின்றனர்.
பஸ் ஸ்டாண்ட்டுக்கு வெளியே சிறிது நேரம் நிறுத்தி பயணியரை ஏற்ற முற்படுவதால், பின்னால் செல்லும் அரசு பஸ்களில் பயணியர் கூட்டம் குறைந்து விடுகிறது. வருவாயை மட்டுமே குறி வைத்து இயக்கப்படும் தனியார் பஸ்கள், போக்குவரத்து விதிகளை மீறியே இயக்கப்படுகின்றன.
துறை ரீதியான அதிகாரிகள், முறையாக கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதும் கிடையாது. தனியார் பஸ்களின் இயக்கத்தை முறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.