/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆனைகட்டியில் மதுபான கடை அகற்ற பழங்குடியினர் கோரிக்கை
/
ஆனைகட்டியில் மதுபான கடை அகற்ற பழங்குடியினர் கோரிக்கை
ஆனைகட்டியில் மதுபான கடை அகற்ற பழங்குடியினர் கோரிக்கை
ஆனைகட்டியில் மதுபான கடை அகற்ற பழங்குடியினர் கோரிக்கை
ADDED : ஆக 11, 2024 10:28 PM
பெ.நா.பாளையம்:ஆனைகட்டியில் இயங்கி வரும் மதுபான கடையால், பழங்குடியினர் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். உடனடியாக மதுபான கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோவை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளனர்.
கோவை ஆனைகட்டி மலைப்பகுதியில், தனியார் மதுபானக்கூடம் சில மாதங்களுக்கு முன்பு துவங்கி செயல்பட்டு வருகிறது. இதனால், ஆனைகட்டி மற்றும் கேரள எல்லை பகுதியில் வசிக்கும் பழங்குடி குடும்பத்தினர், பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து, தென்னிந்திய பழங்குடி மக்கள் சங்க தலைவர் முருகவேல், கோவை மாவட்ட நிர்வாகத்திடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
ஆனைகட்டியில் 'பிரண்ட்ஸ்' என்ற பெயரில், மதுபான கடை அரசியல்வாதிகள் ஒத்துழைப்போடு நடந்து வருகிறது. 2019ம் ஆண்டு தமிழக, கேரள எல்லையில் ஆனைகட்டியில் இருந்த அரசு மதுபான கடையை, பெரும் போராட்டத்திற்கு பிறகு அகற்றினோம்.
அப்போது, ஆனைகட்டி வட்டாரத்தில் மீண்டும் மதுபான கடையை அமைக்க மாட்டோம் என்ற உறுதியை, கோவை மாவட்ட நிர்வாகம் அளித்தது.
ஆனால், தற்போது ஆனைகட்டியில் துவக்கப்பட்டுள்ள மதுபான கூடத்தால், பழங்குடியினர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.
பழங்குடியினர் உடைமைக்கும், உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கும் மதுபான கூடத்தை, தமிழக அரசு உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.