/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கண்புரை குறைபாட்டுக்கு ட்ரைபோகலில் தீர்வு
/
கண்புரை குறைபாட்டுக்கு ட்ரைபோகலில் தீர்வு
ADDED : ஏப் 28, 2024 02:00 AM

'துாரப்பார்வை,கிட்டப்பார்வை மற்றும் இடை நிலை பார்வை பிரச்னைகளுக்கு சிறந்த தீர்வாக ட்ரைபோகல் லென்ஸ்கள் உள்ளன,' என, டிரினிட்டி குழும கண் மருத்துவமனை மருத்துவ இயக்குனர் மற்றும் கார்னியா, கேட்ராக்ட் அறுவை சிகிச்சை நிபுணர் முகமது ஷாபாஸ் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
கண்புரை அறுவை சிகிச்சை என்பது உலகளவில் பொதுவாக மேற்கொள்ளப்படும் சிகிச்சை. கண்புரை அறுவை சிகிச்சை செய்தால் கண் கண்ணாடி பயன்படுத்த அவசியம் இருக்காது.
ஐ.ஓ.எல்., பவர் கணக்கீடுகள் மற்றும் ஐ.ஓ.எல்., மாஸ்டர் மற்றும் லென்ஸ்டார் ஆகிய கருவிகளில் ஏற்பட்டுள்ள சமீப முன்னேற்றங்களால் கண்ணாடி லென்ஸ்களின் திறன் கணக்கீடு துல்லியமானதாக உள்ளது.மல்டிபோகல், ட்ரைபோகல், எக்ஸ்டெண்டட் போகஸ், டோரிக் லென்ஸ்கள் ஆகியவை புதிதாக வந்துள்ளன. டோரிக் லென்ஸ்களில், டோரிக் மோனோபோகல், டோரிக் மல்டிபோகல், டோரிக்ட்ரைபோகல் வகைகள்உள்ளன. கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள் பயன்படுத்துவோருக்கு சிறந்த இடைநிலை பார்வை தேவைப்படுகிறது.
முன்பு கிட்டப்பார்வை மற்றும் துாரப்பார்வை குறைகள் மட்டுமே சரி செய்யப்பட்டு வந்த நிலையில், மல்டிபோகல் லென்ஸ்கள் கொண்டு வரப்பட்டன.
இதில், 'இன் டர்மீடியேட்' பார்வை குறைபாட்டை நிவர்த்தி செய்ய முடியவில்லை. இதையடுத்து இடைநிலை துாரத்தை சரி செய்ய 'டிரைபோகல்' லென்ஸ்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
கம்ப்யூட்டரை பயன்படுத்தும் அனைத்து தரப்பினருக்கும், 'டிரைபோகல்' உதவுகிறது. இடைநிலை துார பிரச் னையையும் நிவர்த்தி செய்கிறது, டிரைபோகல். சமீபத்திய டிரெண்டுகளால் மல்டிபோகலுக்கு பயன்படுத்தப்படும் வளையங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
இதன்பயனாக நோயாளிகள் இரவில் வாகனம் ஓட்டும் போது, கண் கூசாது.இது அருகிலுள்ள, இடைநிலை மற்றும் தொலைதுாரப் பார்வை பிரச்னைகளுக்கு நல்ல பலன் அளிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு, கோவை, ஆர்.எஸ்.புரம், டி.பி.ரோட்டில் உள்ள, டிரினிட்டி கண் மருத்துவமனையை அணுகலாம் அல்லது 77368 96333 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

