/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழ்நாடு இன்ஜி., கல்லுாரியில் 'டிரினிட்டி சம்மிட் 2024'
/
தமிழ்நாடு இன்ஜி., கல்லுாரியில் 'டிரினிட்டி சம்மிட் 2024'
தமிழ்நாடு இன்ஜி., கல்லுாரியில் 'டிரினிட்டி சம்மிட் 2024'
தமிழ்நாடு இன்ஜி., கல்லுாரியில் 'டிரினிட்டி சம்மிட் 2024'
ADDED : செப் 01, 2024 10:54 PM

கோவை:கருமத்தம்பட்டி தமிழ்நாடு இன்ஜி., கல்லுாரியில் உள்ள ஆட்டோமொபைல், சிவில் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜி., துறை மாணவர்களுக்கு புதிய சங்கம் 'டிரினிட்டி சம்மிட் 2024' துவக்க விழா நேற்று முன்தினம் நடந்தது.
பார்க் கல்வி குழும முதன்மை செயல் அலுவலர் அனுஷா பேசுகையில், ''ஆட்டோமொபைல், சிவில் மற்றும் மெக்கானிக்கல் துறைகளை தேர்ந்தெடுத்த மாணவர்கள் தொழில் முனைவோர்களாகவும், ஆராய்ச்சியாளர்களாகவும் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பவர்களாகவும் வளர வேண்டும்,'' என்றார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, சூரியபாலா ஹோண்டா பொது மேலாளர் தனராஜன் பேசுகையில், ''இந்த மூன்று துறைகளும் மூளைக்கு மட்டும் வேலை கொடுக்காமல், உடலுக்கும் வேலை கொடுத்து நமது ஆரோக்கியத்தையும் பாதுகாக்கின்றன,'' என்றார்.
தொடர்ந்து, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.