/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளியில் முப்பெரும் விழா
/
அரசு பள்ளியில் முப்பெரும் விழா
ADDED : மார் 04, 2025 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்:
சின்னமத்தம்பாளையம் அருகே உள்ள பெட்டதாபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.
பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், பெட்டதாபுரம் அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மரம் நடு விழா, விளையாட்டு விழா, ஆண்டு விழா என, முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சியில், தலைமை ஆசிரியர் மதியழகன் வரவேற்றார். கல்வியாளர் ரங்கசாமி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் ராஜேந்திரன், ராஜம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியை கீதா ஆண்டறிக்கை வாசித்தார். மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ் பேசினார்.
விழாவையொட்டி நடந்த பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.