ADDED : மே 10, 2026 07:21 PM
அ நிறம் | அளவு
கோவை: தமிழக முதல்வராக விஜய் பதவி ஏற்றதையடுத்து, த.வெ.க.,வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.
கோவை கிழக்கு மாவட்ட வார்டு அலுவலகங்கள் முன்பு பட்டாசு வெடித்தும், விசில் அடித்தும் கொண்டாடினர். கிழக்கு மாவட்ட இணை அமைப்பாளர் மஞ்சுநாதன் தலைமையில் சிங்காநல்லுார், கள்ளிமடை, ராஜலட்சுமி மில்ஸ் பகுதிகளில் தொண்டர்கள் கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ராமநாதபுரம், ஒண்டிப்புதுார், காந்திபுரம், கணபதி உள்ளிட்ட பகுதிகளில் த.வெ.க.,வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
