sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தி.மு.க.,வை சுழற்றியடிக்கும் 'சுனாமி'கள்! தொகுதிகளை தக்க வைப்பதில் சிக்கல்

/

தி.மு.க.,வை சுழற்றியடிக்கும் 'சுனாமி'கள்! தொகுதிகளை தக்க வைப்பதில் சிக்கல்

தி.மு.க.,வை சுழற்றியடிக்கும் 'சுனாமி'கள்! தொகுதிகளை தக்க வைப்பதில் சிக்கல்

தி.மு.க.,வை சுழற்றியடிக்கும் 'சுனாமி'கள்! தொகுதிகளை தக்க வைப்பதில் சிக்கல்


ADDED : ஏப் 14, 2024 12:51 AM

Google News

ADDED : ஏப் 14, 2024 12:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை, பொள்ளாச்சி, நீலகிரி, திருப்பூர் தொகுதிகளில் களம் காணும் தி.மு.க., மற்றும் கூட்டணி வேட்பாளர்களின் பிரசாரம், பா.ஜ., - அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு இணையாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

'புன்னகை' மாயம்


கோவை தி.மு.க., வேட்பாளராக யார் வருவார் என்ற யூகங்களைத் தகர்த்து, ராஜ்குமார் வேட்பாளராகத் தேர்வானார். சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜி; அமைச்சர் முத்து சாமி போன்றவர்களின் சிரத்தை குறைவு உள்ளிட்ட காரணங்களால் ராஜ்குமாருக்கு ஒத்துழைப்பு குறைவாகவே இருந்தது. தொழில்துறையினரின் ஆதரவைப் பெறும் வகையில், அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா களமிறக்கப்பட்டார்.

பல்லடத்தில் விசைத்தறியாளர்களைப் புறக்கணித்துவிட்டு, ராஜா வேகமாக 'பறந்ததை' தொழில்துறை யினர் ரசிக்கவில்லை. தொகுதிக்குத் தொடர்பே இல்லாத ராஜா, பிரசாரத்தை மெருகேற்றுவார் என்பதை உள்ளூர் தி.மு.க.,வினர் நம்புவதும் இல்லை.

பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை பிரசாரத்தில் ஆளும்கட்சியினரை 'கூறு' போட்டு வருகிறார். நுாறு நாளில் தீர்வு காண்பதாக இவர் அளித்த வாக்குறுதிகள், வாக்காளர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளன. மாற்றம் தேவை என்ற குரல், கோவை முழுக்க ஒலிக்கிறது. அ.தி.மு.க., வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனின் பிரசாரமும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ராஜ்குமாரிடம் 'புன்னகை'யை மருந்துக்கும் காணோம்.

'தோழர்' தாமதம்


திருப்பூர் இந்திய கம்யூ., வேட்பாளராக சுப்பராயன், 'சிட்டிங்' எம்.பி.,யாக இருந்தபோதும், பிரசாரத்துக்கான முன்னெடுப்புகளை, அவர் முன்பே, துவக்கவில்லை. தேர்தலுக்கான ஆயத்தத்தோடு காத்திருந்தது தி.மு.க.,தான்; ஆனால், 'தோழரே' வாய்ப்பைத் தட்டிப் பறித்ததால், தி.மு.க.,வினரிடம் விரக்தி தென்பட்டது. தனது சாதனைகளாக குறிப்பிட்டுச்சொல்லும் விஷயங்கள், வாக்காளர் மத்தியில் எடுபடவில்லை.

திருப்பூர் மாவட்டத்தில் தி.மு.க.,வினர் காட்டும் அக்கறை, ஈரோடு மாவட்டத்தில் குறைவாகத் தான் இருக்கிறது. இருப்பினும் திருப்பூரைக் காட்டிலும் கைகொடுக்கும் என்ற எண்ணத்தில், சுப்பராயனின் பிரசாரம் ஈரோடு மாவட்ட பகுதிகளை 'மையம்' கொண்டிருக்கிறது. ஆளும்கட்சி மீதான அதிருப்தி, தொகுதிக்குள் எட்டிப்பார்க்கவில்லை என்ற வேட்பாளர் மீதான குற்றச்சாட்டு போன்றவை சுப்பராயனுக்கு எதிர்விளைவுகளையே அளிக்கும் என்பது கள யதார்த்தம்.

ஈஸ்வரா... ஈஸ்வரா!


பொள்ளாச்சியில் தி.மு.க., வேட்பாளராக ஈஸ்வரசாமியை, களமிறக்கியிருக்கிறது. தி.மு.க., கோஷ்டிப்பூசல், ஈஸ்வரசாமியை ஆட்டிப்படைக்கிறது; உள்ளடி வேலைகள் கச்சிதமாக நடக்கின்றன.

''அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., ஆட்சியில், பல ஆண்டுகளாக நிலுவையிலுள்ள அப்பர் அமராவதி திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனைமலையாறு - நல்லாறு திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. தென்னை விவசாயிகளின் நிலையோ பரிதாபம். கரும்பு விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை, தமிழக அரசின் அலட்சியத்தால் மூடப்பட்டுள்ளது. விவசாயிகளை தி.மு.க., அரசு வஞ்சித்து வருகிறது'' என்று பா.ஜ., வேட்பாளர் வசந்தராஜன், தி.மு.க.,வை பிரசாரத்தின்போது தெறிக்கவிடுகிறார். பொள்ளாச்சி தொகுதியில் அதிகமுறை வென்றது அ.தி.மு.க.,தான். 'வெற்றி நிச்சயம்' என்கிறார் வேட்பாளர் கார்த்திகேயன். பொள்ளாச்சி தொகுதியை தி.மு.க., தக்கவைப்பதில் பெரும்பாடு பட வேண்டியிருக்கும்.






      Dinamalar
      Follow us