/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சலுான் கடைகளுக்கு செவ்வாய் விடுமுறை
/
சலுான் கடைகளுக்கு செவ்வாய் விடுமுறை
ADDED : மே 30, 2024 05:01 AM
கோவை : சலுான் கடைகளுக்கு, மாதத்தின் கடை செவ்வாய் விடுமுறை விடுவது என, கோவை மாநகர் மாவட்ட சவரத் தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுகுழு கூட்டத்தில், முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, கோவை மாநகர் மாவட்ட சவரத்தொழிலாளர்கள் சங்க தலைவர் ராமசாமி கூறியதாவது: கோவை மாவட்டத்தில் சவரத்தொழிலாளர்கள் சங்கத்துக்கு, 26 கிளைகள் உள்ளன. சலுான் கடைகளுக்கு மாதத்தில் கடைசி செவ்வாய் விடுமுறை விடப்பட்டு வருகிறது. சில கிளைகளை சேர்ந்தவர்கள், மாத விடுமுறை வேண்டாம் என, கருத்து தெரிவித்து வந்தனர்.
அதனால் சங்கத்தின் பொதுக்குழுவை கூட்டி, கருத்து கேட்கப்பட்டது. இதில் பெரும்பாலான உறுப்பினர்கள் விடுமுறை வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில், மாதத்தின் கடை செவ்வாய் சலுான் கடைகளுக்கு விடுமுறை விடுவது என,பொதுக் குழுவில் முடிவு செய்து, விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.