/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாராயணீய மகோற்சவத்துக்கு துளசி விதை வினியோகம்
/
நாராயணீய மகோற்சவத்துக்கு துளசி விதை வினியோகம்
ADDED : ஜூலை 27, 2024 12:49 AM

பாலக்காடு;அகில பாரத நாராயணீய மகோற்சவ குழுவின் சார்பில் நடக்கும், நாராயணீய மகோற்சவத்தின் ஒரு பகுதியாக நடைபெற உள்ள கோடி அர்ச்சனைக்கு முன்னதாக துளசி விதை வினியோகம் செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கொல்லங்கோடு காயத்ரி திருமண மண்டபத்தில் செப்., 22ம் தேதி முதல் 29ம் தேதி வரை அகில பாரத நாராயணீய மகோற்சவ குழுவின் சார்பில் 'நாராயணீய மகோற்சவம்' நடக்கிறது.
உற்சவத்தின் ஒரு பகுதியாக, ஒரு கோடி அர்ச்சனை நடைபெற உள்ளது. பத்தாயிரம் நாராயணீயர் தினமும், 1,008 அர்ச்சனை வீதம், 41 நாட்கள் நாராயண மந்திரத்தை ஜெபித்து ஒரு கோடி அர்ச்சனை நடத்தவுள்ளனர்.
இந்த அர்ச்சனைக்கு முன்னதாக, துளசி விதை வினியோகம் செய்யும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பாலக்காடு வடக்கந்தறை திருபுராய்கல் பகவதி அம்மன் கோவில் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியை, குழுவின் மாநில தலைவர் ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
வரவேற்பு குழு துணைத் தலைவர் ஹரி தலைமை வகித்தார். மகாமண்டலேஸ்வர் சுவாமி பிரபாகரானந்தா சரஸ்வதி, துளசி விதைகளை அர்ச்சனை செய்வோருக்கு வழங்கினார்.