/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டி.வி.எஸ்., அப்பாச்சி 'டார்க் எடிஷன்' அறிமுகம்
/
டி.வி.எஸ்., அப்பாச்சி 'டார்க் எடிஷன்' அறிமுகம்
ADDED : மே 23, 2024 04:54 AM

கோவை,: டி.வி.எஸ்., நிறுவனத்தின் 160 சீரிஸ் மோட்டார் சைக்கிள்களின் புத்தம் புதிய கருப்பு நிற பதிப்பான அப்பாச்சி ஆர்.டி.ஆர்., 160 மற்றும் ஆர்.டி.ஆர்., 160 4வி ஆகிய இருசக்கர வாகனங்கள், தமிழகத்திலேயே முதல்முறையாக கோவையில், நேற்று அறிமுகம் செய்யப்பட்டன.
இரண்டு வாகனங்களும், டிஜிட்டல் எல்.சி.டி., கிளஸ்டர், எல்.இ.டி., ஹெட் லேம்ப், டெயில் லாம்ப் உள்ளிட்ட பல அம்சங்களுடன், அறிமுகமாகி இருக்கின்றன.
இந்த வாகனப் பிரிவில், முதன்முறையாக, இன்ஜின் மற்றும் ஏ.பி.எஸ்., மோட் ஆகிய இரண்டும் ஒருங்கிணைக்கப்பட்டு, ஸ்போர்ட் அனுபவம், நகர்ப்புற பரபரப்பான பயணம் மற்றும் மழை நேர பாதுகாப்பான பயணத்துக்கு ஏற்ற வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
கோவை லீ மெரிடியன் ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில், டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனத்தின் பிரீமியம் பிரிவின் வணிகத் தலைவர் விமல் சும்ப்லி கூறுகையில், ''ஆர்.டி.ஆர்., 160 வரிசையானது, கம்பீரமான தோற்றத்தின் உத்வேகத்துடன், புதிய பிளாக் எடிஷனுடன் களமிறங்கி உள்ளது.
பெட்ரோல் டேங்கின் மீது பதிக்கப்பட்ட கருப்பு நிற டி.வி.எஸ்., லோகோவுடனான அதிக ஆடம்பரமில்லாத, அழகான கிராபிக்ஸ், வாகனத்தின் கவர்ச்சியை மேம்படுத்துவதாக உள்ளது,'' என்றார்.
பிளாக் எடிஷன் டி.வி.எஸ்., அப்பாச்சி ஆர்.டி.ஆர்., 160 சிறப்பு விலையாக, ஒரு லட்சத்து ஒன்பதாயிரத்து 990, ஆர்.டி.ஆர்., 160 4வி, ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 990 ரூபாய் (எக்ஸ் ஷோரூம் - தமிழ்நாடு) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

