ADDED : மார் 05, 2025 10:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிசா வாலிபர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
பெரியநாயக்கன்பாளையம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, கோவை மேட்டுப்பாளையம் ரோடு, மத்தம்பாளையத்தில் கையில் பையுடன் சந்தேகமாக நின்று கொண்டிருந்த வாலிபர்களை பிடித்து, விசாரணை செய்தனர்.
அப்போது அவர்கள் வைத்திருந்த பையில் விற்பனை செய்வதற்காக, 2 கிலோ எடையுள்ள கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஒருவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சிரிதரமாஜி,39, கோவையை சேர்ந்த பாலகிருஷ்ணன், 36, என தெரியவந்தது.
போலீசார் இருவரையும் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.