/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வடவள்ளி பகுதியில் கஞ்சா விற்ற இருவர் கைது
/
வடவள்ளி பகுதியில் கஞ்சா விற்ற இருவர் கைது
ADDED : செப் 07, 2024 01:33 AM
வடவள்ளி:வடவள்ளி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், எஸ்.ஐ., தனசேகரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மருதமலை அடிவாரம், லேப்ரசி காலனியில், சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை நடப்பதாக, ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது, சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இருவர், பொட்டலங்களை கை மாற்றிக்கொண்டிருந்தனர்.
அவர்களை பிடித்து சோதனை செய்த போது, கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. மருதமலை அடிவாரத்தை சேர்ந்த சாலமன்,27, பொங்காலியூரை சேர்த்த சபரி,24 ஆகிய அந்த இருவரையும் கைது செய்து, வழக்கு பதிவு செய்தனர். அவர்களிடமிருந்து, 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.