/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சட்ட விரோதமாக மது விற்ற இருவர் கைது
/
சட்ட விரோதமாக மது விற்ற இருவர் கைது
ADDED : மே 02, 2024 11:35 PM
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு பகுதியில், சட்ட விரோதமாக மது விற்றவர்களை போலீசார் கைது செய்தனர்.
கிணத்துக்கடவு பகுதியில், ஆங்காங்கே சட்ட விரோதமாக கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அதில், பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், முள்ளுப்பாடி பாலம் அருகே புதுக்கோட்டையை சேர்ந்த கூலி தொழிலாளி ரமேஷ், 32, மற்றும் கோவில்பாளையம் பகுதியில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கூலி தொழிலாளி ஆறுமுகம், 36, இருவரும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கிணத்துக்கடவு போலீசார், அவர்கள் இருவரிடம் இருந்தும், தலா, 10 மது பாட்டில்களை பறிமுதல் செய்து, வழக்குப்பதிவு செய்தனர்.