/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மளிகை கடையில் திருடிய இருவர் கைது
/
மளிகை கடையில் திருடிய இருவர் கைது
ADDED : மே 22, 2024 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்:மதுக்கரையை அடுத்துள்ள அரிசிபாளையம், விநாயகர் கோவில் வீதியில் மளிகை கடை வைத்திருப்பவர் பட்டுராஜா,51. நேற்று காலை கடையை திறக்க வந்தவர், கடையின் வலதுபுற கதவு உடைந்திருப்பதை கண்டார்.
கல்லாவில் இருந்த, 1,800 ரூபாய் திருட்டு போயிருந்தது. புகாரின்பேரில், மதுக்கரை போலீசார் விசாரணை நடத்தி அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி விக்னேஸ்வரன், 21, டிரைவர் பாஸ்கர், 23 ஆகியோரை கைது செய்தனர். மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்ட இருவரும், சிறையிலடைக்கப்பட்டனர்.

