ADDED : மார் 11, 2025 04:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி : தேனி மாவட்டம், கோடங்கிப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளரி அழகர்சாமி,62. பொள்ளாச்சி பெருமாள் செட்டி வீதியில் நேற்றுமுன்தினம் நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அவரை மிரட்டி மொபைல்போனை பறித்த, பொள்ளாச்சி, மாக்கினாம்பட்டியை சேர்ந்த ஜான்சிமேரி,26, கொல்லம்பட்டியை சேர்ந்த சூர்யபிரகாஷ், 29, ஆகியோரை மேற்கு போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.