ADDED : மே 05, 2026 08:41 PM
அ நிறம் | அளவு
கோவை: இருகூர், மகாத்மா காந்தி ரோட்டை சேர்ந்தவர் ராம்குமார்.
அதே பகுதியிலுள்ள பொன்விழா நகர் சந்திப்பில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இருவர், ராம்குமார் பாக்கெட்டில் வைத்திருந்த மொபைல்போனை பறித்து தப்பிக்க முயன்றனர். ராம்குமார் மற்றும் நண்பர்கள் சேர்ந்து பைக்கில் துரத்திய போது, இருவரும் தவறி விழுந்தனர். அவர்களை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், மொபைல் போனை பறித்தது சிங்காநல்லுார், அஸ்தாந்திர நாயக்கர் வீதியை சேர்ந்த அருண்பிரகாஷ், 29, கார்த்திகேயன், 27 எனத் தெரிந்தது. இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
