ADDED : மே 26, 2026 03:20 PM
அ நிறம் | அளவு
கோவை: தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்த நாட்டை சேர்ந்தவர் விக்னேஷ்,20, கோவையில் தங்கியிருந்து சமையல் சப்ளையராக இருக்கிறார். அதே போல திருப்பூர் சி.எஸ்.காலனி சேரன்,27, திண்டுக்கல் , வடமதுரை பாண்டியராஜ்,28, ஆகியோர், ஈரோட்டிலுள்ள கேட்டரிங் நிறுவனத்தில் சப்ளையராக பணியாற்றுகின்றனர். நேற்று முன்தினம் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பணியாற்றினர்.
பின் ரேஸ்கோர்ஸ் பகுதியிலுள்ள டாஸ்மாக் பாரில் மது குடித்த போது தகராறு ஏற்பட்டது. அப்போது, மது பாட்டிலை உடைத்து விக்னேஷின் கை, கால்களில் இருவரும் குத்தினர்.
படுகாயமடைந்த விக்னேஷ் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ரேஸ் கோர்ஸ் போலீசார் விசாரித்து, சேரன், பாண்டியராஜ் ஆகியோரை கைது செய்து சிறையிலடைத்தனர்.
