/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பெற்றோர் கண் முன்னே குழந்தை கடத்த முயன்ற இருவர் கைது
/
பெற்றோர் கண் முன்னே குழந்தை கடத்த முயன்ற இருவர் கைது
பெற்றோர் கண் முன்னே குழந்தை கடத்த முயன்ற இருவர் கைது
பெற்றோர் கண் முன்னே குழந்தை கடத்த முயன்ற இருவர் கைது
ADDED : செப் 05, 2024 12:30 AM
கோவை : கோவை எஸ்.பி., அலுவலகம் எதிரில் உள்ள ஓட்டலில் இருந்து, குழந்தையை கடந்த முயன்ற இருவரை, போலீசார் கைது செய்தனர்.
கோவை இருகூர் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரவீன் குமார், 41; வக்கீல். இவர் தனது மனைவி மற்றும் நான்கு வயது குழந்தையுடன், ஸ்டேட் பேங்க் ரோட்டில், எஸ்.பி., அலுவலகம் எதிரில் உள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். உணவு சாப்பிட்ட பிறகு, பிரவீன் தனது மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்தார்.
அவரின் மனைவி குழந்தையை விட்டுவிட்டு, கை கழுவ உள்ளே சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத இருவர், குழந்தையை கடத்திச் செல்ல முயன்றனர்.
இதை பார்த்த பிரவீனின் மனைவி, சத்தம் போட்டார். அப்போது, போனில் பேசிக்கொண்டிருந்த பிரவீன், குழந்தையை துாக்கிச் செல்ல முயன்ற இருவரையும் பிடித்து, போலீசில் ஒப்படைத்தார்.
போலீசார் விசாரணையில், குழந்தையை கடந்த முயன்றவர்கள் கோவைப்புதுார், குளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த மணிவண்ணன், 30 மற்றும் பத்மநாபன், 30 என்பது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.