/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வீடு புகுந்து திருடிய இருவர்; துரத்தி பிடித்த உரிமையாளர்
/
வீடு புகுந்து திருடிய இருவர்; துரத்தி பிடித்த உரிமையாளர்
வீடு புகுந்து திருடிய இருவர்; துரத்தி பிடித்த உரிமையாளர்
வீடு புகுந்து திருடிய இருவர்; துரத்தி பிடித்த உரிமையாளர்
ADDED : மார் 05, 2025 12:18 AM
சிங்காநல்லுார்; பட்டப்பகலில் வீடு புகுந்து திருடிய இருவரில், ஒருவரை வீட்டின் உரிமையாளரே துரத்திப் பிடித்து 'கவனிப்பு' செய்தார்.
கோவை, இருகூர், பி.பிரியாதோட்டத்தைச் சேர்ந்தவர் நந்தகுமார், 43. இவரது மனைவி ஜெயந்தி, 41. இருவரும் விவசாய பொருட்கள் வாங்க, 3ம் தேதி சந்தைக்கு சென்று மதியம் வீடு திரும்பியபோது, முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்தது. அப்போது வீட்டிற்குள் இருந்து வேகமாக வெளியே வந்த இருவர், நந்தகுமாரை தாக்கி, தப்பி ஓடினர்.
அங்கு இரு பைக்குகளில் காத்திருந்த வேறு இருவருடன் தப்ப முயன்றனர். அவர்களை துரத்திய நந்தகுமார், ஒருவரை மட்டும் பிடித்தார். மற்ற மூவரும் திருடப்பட்ட, 13 சவரன் தங்கம், 100 கிராம் வெள்ளி, 50,000 ரூபாய் பணத்துடன் தப்பினர். சிக்கிய நபர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
அவர், திருநெல்வேலியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், வேறு மூவருடன் சேர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. சிங்காநல்லுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பிய மூவரை தேடி வருகின்றனர்.