/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இரு நாட்கள் குடிநீர் வினியோகம் 'கட்' : மாற்று ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தல்

ADDED : ஏப் 25, 2024 06:22 AM
கோவை : அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக இரு நாட்கள் குடிநீர் வினியோகம் இருக்காது என, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் பராமரிக்கப்படும் கூட்டு குடிநீர் திட்டத்தில் வெள்ளக்கிணறு, பெரியநாயக்கன்பாளையம், பெரியமத்தம்பாளையம் மற்றும் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதிகளில், 600 மி.மீ., விட்டம் கொண்ட குழாய் வாயிலாக குடிநீர் வழங்கப்படுகிறது.
இக்குழாயில் இன்றும், நாளையும் அவசர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதனால், கோவை மாநகராட்சி, கவுண்டம்பாளையம், வடவள்ளி, வீரகேரளம் பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. பணிகள் முடிந்து வரும், 27ம் தேதி காலை முதல் குடிநீர் வினியோகம் செய்யப்படும். எனவே, உள்ளாட்சி நிர்வாகம் மற்றும் பொது மக்கள், உள்ளூர் நீர் ஆதாரங்கள் வாயிலாக மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்ளுமாறு, வாரியத்தின் பில்லுார் பராமரிப்பு கோட்ட அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.