/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர்கள் இருவர் உயிரிழப்பு
/
வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர்கள் இருவர் உயிரிழப்பு
வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர்கள் இருவர் உயிரிழப்பு
வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர்கள் இருவர் உயிரிழப்பு
ADDED : மார் 25, 2024 06:25 AM
தொண்டாமுத்தூர் : வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர்கள் இருவர், மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தனர்.
பூண்டி, வெள்ளியங்கிரி மலையின் ஏழாவது மலை உச்சியில் சுயம்புவாக உள்ள ஈசனை தரிசிக்க கடந்த மாதம், 12ம் தேதி முதல் பக்தர்கள் மலையேற வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இந்நிலையில், தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தை சேர்ந்த டாக்டர் சுப்பா ராவ்,57 என்பவர் தனது நண்பர்களுடன், நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு, வெள்ளிங்கிரி மலை அடிவாரத்திற்கு வந்து மலையேற துவங்கியுள்ளார்.
நான்காவது மலையில் நடந்து கொண்டிருக்கும்போது, சுபா ராவிற்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, மயங்கி கீழே விழுந்து விட்டார்.
அடிவாரத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, டோலி மூலம் அடிவாரத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு வந்த 108 மருத்துவ பணியாளர்கள் பரிசோதனை செய்துவிட்டு, சுப்பாராவ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
மற்றொருவர் மரணம்
சேலம் மாவட்டம், ஜலகண்டபுரத்தை சேர்ந்த தியாகராஜன்,35 என்பவர், தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் இரவு, நண்பர்கள், 12 பேருடன் வெள்ளியங்கிரி மலை ஏறி, சுவாமியை தரிசித்துவிட்டு, நேற்று மாலை முதல் மலை இறங்கிக்கொண்டிருக்கும்போது, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மயங்கி விழுந்து உயிரிழந்தார். ஆலாந்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

