ADDED : ஆக 31, 2024 02:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, கோவில்பாளையம் அருகே நடந்த விபத்தில், இருவர் காயம் அடைந்துள்ளனர்.
கிணத்துக்கடவு, கோவில்பாளையத்தை சேர்ந்தவர் கலையரசன், 29. மற்றும் சாகுல்ஹமீது, 25. இவர்கள் இருவரும் பிட்டர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.
இருவரும் கோவில்பாளையம், காளியண்ணன்புதூர் அருகே பைக்கில் செல்லும் போது உதயபிரகாஷ், டிரைவர், நான்கு சக்கர லோடு வாகனத்தில் வந்துள்ளார்.
அப்போது பைக்கில் வந்த இருவர் மீதும் மோதி விபத்து நடந்தது. இதில், காயம் அடைந்த கலையரசன் மற்றும் சாகுல்ஹமீது இருவரும் பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.