/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செல்போன் பறிக்க முயன்ற இருவருக்கு சிறை
/
செல்போன் பறிக்க முயன்ற இருவருக்கு சிறை
ADDED : செப் 02, 2024 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்;பள்ளி மாணவனிடம் செல்போன் பறிக்க முயன்ற இருவர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பீடம் பள்ளியை சேர்ந்த 14 வயது சிறுவன், டியூசன் சென்று விட்டு வீட்டுக்கு சென்றார். அப்போது, அவ்வழியே வந்த மூவர், கத்தியை காட்டி, மாணவனிடம் இருந்து செல்போனை பறிக்க முயன்றனர்.
அவர்களிடம் இருந்த தப்பிய மாணவன், பெற்றோரிடம் தகவல் தெரிவித்தான். இதுகுறித்து சிறுவனின் தந்தை சூலுார் போலீசில் புகார் அளித்தார். இச்சம்பவத்தில் தொடர்புடைய பாப்பம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் மகன் ஐயப்பன்,29, முருகன் மகன் தமிழ்செல்வன், 22 ஆகிய இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.