/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கட்டுமான பொருட்கள் திருட்டு: கூலி பணியாளர் இருவர் கைது
/
கட்டுமான பொருட்கள் திருட்டு: கூலி பணியாளர் இருவர் கைது
கட்டுமான பொருட்கள் திருட்டு: கூலி பணியாளர் இருவர் கைது
கட்டுமான பொருட்கள் திருட்டு: கூலி பணியாளர் இருவர் கைது
ADDED : ஆக 14, 2024 12:36 AM
கோவை:உக்கடம் அருகே கட்டுமான பொருட்களை திருடிய இருவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை, தெற்கு உக்கடம், ஜி.எம்.நகரை சேர்ந்தவர் ஷாஜகான்,45. கட்டுமான பொருட்கள் விற்பனை கடை வைத்துள்ளார். ஜி.எம். நகரில் இவர் வீடு கட்டிவரும் நிலையில், கடந்த, 7ம் தேதி காலை, 10:10 மணிக்கு கட்டுமான மற்றும் எலக்ட்ரிக்கல் பொருட்கள் இருப்பை ஆய்வு செய்துள்ளார்.
அப்போது, இரண்டு எச்.பி., மோட்டார்கள், 12 கிலோ இரும்பு கம்பிகள், காப்பர் ஒயர், சுவிட்ச் பாக்ஸ், கார் பேட்டரி என சுமார் ரூ.71 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து, பெரியகடை வீதி போலீசில் ஷாஜகான் புகார் அளித்தார்.
'சிசிடிவி' காட்சி பதிவுகளை வைத்து, போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, கூலி வேலை செய்து வரும், உக்கடம், ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த பாலமுருகன்,23, மற்றும் உக்கடம், ஜி.எம். நகரை சேர்ந்த அப்துல் காதர்,22, ஆகியோர் பொருட்களை திருடியது தெரியவந்தது.
இருவரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களிடம் இருந்து இரண்டு எச்.பி., மோட்டார்கள், காப்பர் ஒயர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.