/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குண்டர் சட்டத்தில் இருவர் கைது
/
குண்டர் சட்டத்தில் இருவர் கைது
ADDED : ஜூலை 16, 2024 02:12 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி கிழக்கு போலீசார், 60 கிலோ கஞ்சா விற்பனைக்கு வைத்து இருந்த, கேரளா மாநிலத்தை சேர்ந்த ரஷீத்,30, கலீல் ரகுமான்,44 ஆகியோரை கடந்த மாதம் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.
மேலும், பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதார பராமரிப்புக்கு பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்துக்காக, இருவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை எஸ்.பி., பத்ரிநாராயணன், கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமாருக்கு பரிந்துரை செய்தார்.
அதன்பேரில், இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். சிறையில் உள்ள இருவரிடம் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ததற்கான நகல், சிறைத்துறை அதிகாரி வாயிலாக வழங்கப்பட்டது.