/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயிலில் வந்த பெண் உட்பட இருவர் பலி
/
ரயிலில் வந்த பெண் உட்பட இருவர் பலி
ADDED : மே 31, 2024 01:45 AM
கோவை;திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் காளிதாஸ், 52; இவர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது மனைவி பூங்குழலியுடன் நேற்று கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற ரயிலில் வந்தார். ரயில் கோவை அருகே வந்ததும், காளிதாஸ் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.* மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் ரேகா நுனியா, 29; இவர் தனது கணவருடன் நேற்று முன்தினம் பெங்களூரூவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற ரயிலில் வந்தார். ரயில் பாலக்காடு ஸ்டேஷன் வந்ததும் ரேகாவுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. அங்கிருந்த டாக்டர் அவரை பரிசோதித்து, ரயிலில் பயணம் செய்யலாம் என்றார்.
ரயில் கோவை வந்ததும் மீண்டும் ரேகா நுனியாவுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு, அவர் உயிரிழந்தார். இந்த இரு சம்பவம் குறித்தும் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.