/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கார் மீது பைக் மோதல்; மாணவர் இருவர் பலி
/
கார் மீது பைக் மோதல்; மாணவர் இருவர் பலி
ADDED : ஆக 18, 2024 01:26 AM

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு அருகே, தேசிய நெடுஞ்சாலையில் அமிர்தா பல்கலை மாணவர்கள் இருவர் வாகன விபத்தில் இறந்தனர்.
கோவை, எட்டிமடையில் உள்ள அமிர்தா பல்கலையில், பி.டெக்., சி.சி.இ., மூன்றாம் ஆண்டு மாணவர் ஹரியானாவை சேர்ந்த சுமித்குமார், 21, கெமிக்கல் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு மாணவர் புதுடில்லியை சேர்ந்த அக் ஷத், 20, இருவரும், விடுதியில் தங்கி படிக்கின்றனர்.
இரு நாட்கள் பல்கலை விடுமுறை என்பதால், நேற்று மதியம் நண்பரிடம் பைக் வாங்கிக்கொண்டு, வால்பாறை செல்வதற்கு, கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்றனர். பைக்கை சுமித் ஓட்டினார்.
இதில், கிணத்துக்கடவு, கோதவாடி பிரிவில் பேக்கரி அருகே நின்றிருந்த காரின் மீது, பைக் உரசியது. இதில், பைக்கில் சென்ற இருவரும் நிலை தடுமாறி, பின்னால் வந்த மற்றொரு காரின் மீது சாய்ந்ததால் தூக்கி வீசப்பட்டனர்.
விபத்தில் படுகாயமடைந்த இருவரையும், அங்கிருந்த மக்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சுமித்குமார் இறந்தார்.
பொள்ளாச்சியில் இருந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அக் ஷத் இறந்தார்.
விபத்து குறித்து, கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

