/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
360 மணி நேரம் யோகா சாதனை பெருமை கொள்கிறது உடுமலை!
/
360 மணி நேரம் யோகா சாதனை பெருமை கொள்கிறது உடுமலை!
360 மணி நேரம் யோகா சாதனை பெருமை கொள்கிறது உடுமலை!
360 மணி நேரம் யோகா சாதனை பெருமை கொள்கிறது உடுமலை!
ADDED : ஜூலை 14, 2024 01:00 AM

யோகாவில் குணசேகரனின் சாதனை பட்டியல், ஆயிரத்தை கடந்துள்ளது. உடுமலையை சேர்ந்த இவர், 2020ம் ஆண்டு யோகாவில் 1001வது உலக சாதனையை நிகழ்த்தினார்.
சமீபத்தில் இவர் கண்களை கட்டிக்கொண்டு, 360 மணி நேரம் தொடர்ந்து யோகாசனம் செய்து, உலக சாதனை படைத்து இருக்கிறார். வேர்ல்டு புக் ஆப் ரெக்கார்டில், உலக சாதனையாக இடம் பெற்றுள்ளது. 6,000க்கும் மேற்பட்ட யோகா மாணவர்களை, உலக சாதனையாளர்களாக உருவாக்கி இருக்கிறார்.
''நான் எனது 33வது வயதில் இருந்து யோகா செய்து வருகிறேன். யோகா, இந்தியாவுக்கே உரிய பாரம்பரிய கலையாகும். ஆதிகாலத்தில் இருந்து நம் முன்னோர்கள், இந்த கலையை பாதுகாத்து வந்துள்ளனர். அதனால் இந்த விஞ்ஞான யுகத்திலும், யோகக்கலை உலகம் முழுவதும் பரவி வளர்ந்துள்ளது,''.
''யோகாவில் ஒவ்வொரு ஆசனத்துக்கும் பலன்கள் உண்டு. யோகா பயிற்சி மையம் நடத்துபவர்கள், குறிப்பிட்ட சில ஆசனங்களை மட்டும் பயிற்சி செய்து வருகின்றனர். நான் முடிந்தவரை, அனைத்து ஆசனங்களையும் செய்ய முயற்சி செய்து வருகிறேன். மாணவர்களுக்கும் கற்றுக் கொடுக்கிறேன்,''.
''பார்வையற்றவர்களுக்கு யோகா கலையில் ஈர்ப்பை ஏற்படுத்தும் விதமாக, கண்களை கட்டிக்கொண்டு கடந்த ஜூன் 21ம் தேதி முதல் ஜூலை 6 வரை, 360 மணிநேரம் யோகாசனம் செய்து, உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து இருக்கிறேன்,''.
''இது என்னுடைய 1010வது உலக சாதனை. இதில் ஒரு கின்னஸ் சாதனையும் அடங்கும். இது தொடரும்,'' என்கிறார் குணசேகரன்.