/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சைக்கிள் விபரம் பதிவிட முடியலை! பள்ளி தலைமையாசிரியர்கள் திணறல்
/
சைக்கிள் விபரம் பதிவிட முடியலை! பள்ளி தலைமையாசிரியர்கள் திணறல்
சைக்கிள் விபரம் பதிவிட முடியலை! பள்ளி தலைமையாசிரியர்கள் திணறல்
சைக்கிள் விபரம் பதிவிட முடியலை! பள்ளி தலைமையாசிரியர்கள் திணறல்
ADDED : ஆக 01, 2024 12:40 AM
பொள்ளாச்சி : இலவச சைக்கிள் திட்டத்தில், தகவல் முன்கூட்டியே தெரிவிக்கப்படாததால், எமிஸ் தளத்தில் பதிவிட முடியாமல் தலைமையாசிரியர்கள் தடுமாறுகின்றனர்.
தமிழகத்தில், கடந்த, 2004ம் ஆண்டு முதல் பிளஸ் 1 பயிலும் மாணவ, மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக, ஆண்டுதோறும் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.
நடப்பு கல்வியாணடு, கடந்த ஜூன் மாதம் பிளஸ் 1 வகுப்பு துவங்கிய நிலையில், இலவச சைக்கிள் பெறும் மாணவர்களின் பெயர் பட்டியல் பள்ளி வாரியாக தயாரிக்கப்பட்டது. அதன்படி, தற்போது, ஒவ்வொரு பள்ளிக்கும் மாணவ, மாணவியர் எண்ணிக்கைக்கு ஏற்ப சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது.
சைக்கிள் பெறும்போது, நிறுவனத்தாரிடம் கியாரன்டி கார்டு வாங்கி, அந்த விபரத்தை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த தகவல் காலதாமதமாக கிடைக்கப் பெறுவதால், சைக்கிள் பெற்றும், கியாரன்டி கார்டு வாங்க முடியவில்லை என, பள்ளித் தலைமையாசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
பஞ்சாப் மாநிலம், லுாதியானாவில் உள்ள 'ஏவான்' நிறுவனம் தயாரிப்பிலான சைக்கிள், மாணவ, மாணவியருக்க வழங்கப்படுகிறது. இதற்கு, கியாரன்டி கார்டு வாங்க வேண்டும் என்ற தகவல், பள்ளிக் கல்வித்துறையால், காலதாமதமாகவே தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சனி, ஞாயிறு கிழமைகளில் எந்தவொரு முன்னறிப்பும் இன்றி பள்ளிக்கு சைக்கிள் எடுத்துவரப்படுகிறது. இதனால், பல பள்ளிகளில் சைக்கிள் பெற்றும், அதற்கான கியாரன்டி கார்டை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எமிஸ் தளத்தில் கியாரன்டி கார்டு விபரத்தையும் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளதால், பலர் செய்வதறியாது திணறி வருகின்றனர். இனி வரும் நாட்களில் எந்தவொரு தகலையும், முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என, உயரதிகாரிகளிடம் வேண்டுகோளும் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.