/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அறிவிப்பின்றி சாலை பணி கள் வாகன ஓட்டுநர்கள் திணறல்
/
அறிவிப்பின்றி சாலை பணி கள் வாகன ஓட்டுநர்கள் திணறல்
அறிவிப்பின்றி சாலை பணி கள் வாகன ஓட்டுநர்கள் திணறல்
அறிவிப்பின்றி சாலை பணி கள் வாகன ஓட்டுநர்கள் திணறல்
ADDED : ஜூலை 30, 2024 01:58 AM
பொள்ளாச்சி;முறையான அறிவிப்பு பலகை வைக்காமல், நடைபெறும் சாலை பணிகளால் வாகன ஓட்டுநர்கள் திணறுகின்றனர்.
பொள்ளாச்சி நகரில், நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகரித்து வருகிறது. அதிகப்படியான வாகனங்கள் இயக்கப்படும் நிலையில், நெடுஞ்சாலைகள் விரிவுபடுத்தப்பட்டும் வருகின்றன.
இதுதவிர, நகர சாலைகளிலும் அவ்வப்போது புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது ஒரு புறமிருக்க, ரோட்டின் நடுவே, பாதாள சாக்கடையின் ஆளிறங்கு குழாயில் அடைப்பை நீக்குதல், கசிவான மற்றும் உடைந்த குடிநீர் குழாயை சீரமைத்தல் உள்ளட்ட பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வாறு, சாலையில் எந்தவொரு பணிகள் மேற்கொண்டாலும், 'ஆட்கள் பணிபுரிகிறார்கள்; சீரமைப்பு பணி நடப்பதால் மெதுவாக செல்லவும்,' போன்ற முறையான அறிவிப்பு பலகைகள் வைக்கப்படுவதில்லை.
இதனால், அதிவேகமாக செல்லும் வாகன ஓட்டுநர்கள் விபத்துக்கு உள்ளாகும் சூழல் ஏற்படுகிறது. சீரமைப்பு பணி முழுமை பெறாத நிலையில், இரவு நேரங்களில், பள்ளம் தெரியாமல் விபத்துகள் ஏற்படுகின்றன.
எனவே, சாலையில் பணி மேற்கொள்ளும் இடத்தில், விழிப்புணர்வு பலகை வைக்க வேண்டும் என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
வாகன ஓட்டுநர்கள் கூறுகையில், 'சாலை விரிவாக்கம், ரோடு புதுப்பித்தல் போன்ற பணியின் போது, வாகன ஓட்டுநர்களை தெரிவிக்கும் வகையில் அறிவிப்பு பலகை வைக்கப்படுவதில்லை. சில நேரங்களில் டிவைடர் வைக்கப்பட்டால் அவற்றில் 'ரிப்ளக்டர்' ஒட்டப்படுவதும் கிடையாது.
இதனால், அதிவேகமாக செல்லும் வாகனங்கள், டிவைடர் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றன. இதற்கு, அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் அலட்சியமே காரணமாகும்,' என்றனர்.