/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆங்காங்கே 'முளைக்கும்' அனுமதியற்ற விளம்பர பலகைகள்! தேர்தல் 'பிஸி'யில் கவனம் சிதறிய அதிகாரிகள்
/
ஆங்காங்கே 'முளைக்கும்' அனுமதியற்ற விளம்பர பலகைகள்! தேர்தல் 'பிஸி'யில் கவனம் சிதறிய அதிகாரிகள்
ஆங்காங்கே 'முளைக்கும்' அனுமதியற்ற விளம்பர பலகைகள்! தேர்தல் 'பிஸி'யில் கவனம் சிதறிய அதிகாரிகள்
ஆங்காங்கே 'முளைக்கும்' அனுமதியற்ற விளம்பர பலகைகள்! தேர்தல் 'பிஸி'யில் கவனம் சிதறிய அதிகாரிகள்
ADDED : மே 03, 2024 12:37 AM

கோவை:கோவை மாநகராட்சி அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாததால், நகர பகுதிகளில் அனுமதியற்ற விளம்பர பலகைகள் மீண்டும் வைக்கப்பட்டுள்ளன.
கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே, கடந்தாண்டு ஜூன் மாதம் அனுமதியின்றி விளம்பர பலகை வைத்தபோது, இரும்பு சாரம் சரிந்து, சம்பவ இடத்திலேயே மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவிட்டதும், மாவட்டம் முழுவதும் அனுமதியற்ற விளம்பர பலகைகள் அகற்றப்பட்டன. இரும்பு சட்டங்களை சம்பந்தப்பட்ட விளம்பர நிறுவனத்தினரே அகற்றிக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் எடுத்த நடவடிக்கையில், நகரப்பகுதிகளில், ரயில்வேக்கு சொந்தமான இடங்களை தவிர, மற்ற இடங்களில் வைத்திருந்த அனுமதியற்ற விளம்பர பலகைகளை, மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் அகற்றினர். மீண்டும் மீண்டும் விளம்பர பலகைகள் வைப்பதை தடுக்க, கட்டட உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பது, எப்.ஐ.ஆர்., பதிவு செய்வது உள்ளிட்ட சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சில இடங்களில் இரும்பு சட்டங்கள் அறுத்தெடுக்கப்பட்டன.
மீண்டும் முளைத்தன
லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், அதிகாரிகளின் கவனம் திசை திரும்பியது. இதை பயன்படுத்தி, நகர பகுதிகளில் ஆங்காங்கே மீண்டும் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. ஸ்டேட் பாங்க் ரோட்டில் எஸ்.பி., அலுவலகம் எதிரே உணவகத்தின் சுவற்றில் விளம்பர பலகைகள் பலமுறை அகற்றப்பட்டு இருக்கின்றன. இரும்பு சாரத்தை அகற்றாமல் நகரமைப்பு பிரிவினர் திரும்பி வருவதால், அதிகாரிகளின் கண்காணிப்பு குறைந்ததும் மீண்டும் விளம்பர பலகைகள் வைக்கப்படுகின்றன.
இதேபோல், குறிச்சி குளக்கரையில சின்ன குளத்தில் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள இடத்துக்கு அருகே உள்ள கட்டடத்தின் உயரே விளம்பர பலகை காணப்படுகிறது.
தடாகம் ரோட்டில் வேலாண்டிபாளையத்தில் இரண்டு இடங்களில், அவிநாசி ரோட்டில் ஹோப் காலேஜ் மேம்பாலம் அருகே ஒரு கட்டடத்தில் விளம்பர பலகை காணப்படுகிறது. இதேபோல், நகரெங்கும் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
நகர்ப்பகுதியில் எங்கெங்கு விளம்பர பலகைகள் இருக்கின்றன என்கிற 'லிஸ்ட்' அனுப்புங்கள்; அவை ஒரே நாளில் அகற்றப்படும். ஐகோர்ட்டில் வழக்கு விசாரணையில் இருப்பதால், ரயில்வேக்கு சொந்தமான இடங்களில் மட்டும் அகற்ற முடியாது,'' என்றார்.
- சிவகுரு பிரபாகரன்,
மாநகராட்சி கமிஷனர்,
கோவை.